Translate

சனி, 20 ஜூன், 2015

அக்கா : Preparation 1

பணம் தான் மோட்டிவேஷன் என்றால் அக்கா விபச்சாரியாக இருக்க தேவையில்லை. 

சனி, 2 மே, 2015

அக்கா : Preparation

         அக்கா ஒரு எம்.எல்.ஏ. தன்னுடைய 15வது வயதில் பாலியல் தொழிலாளியாக வட சென்னையில் வாழ்க்கையை ஆரம்பிக்கிறார். அக்காவின் உண்மைப் பெயர் ரங்கநாயகி. அவருடைய குழந்தைப் பருவமும் இளமைப் பருவமும் சொல்ல முடியாத துயரங்களையும் துரோகங்களையும் மனதை ஆர்ப்பறிக்கும் இன்பங்களையும் கொண்டிருக்கிறது. ரங்கநாயகிக்கு பாலியல் உணர்வு சராசரிகளை விடவும் கொஞ்சம் அதிகம். யாரென்று தெரியாத, தற்போது முகம் கூட நினைவில் இல்லாத அந்த ஆளை நம்பி வீட்டை விட்டு ஓடிவரும்போது ரங்கநாயகிக்கு வயது 13. தன் காதனலோடு தங்கியிருக்கும் அறைக்குள் ஒர் ஆசாமி புகுந்து பலாத்காரம் செய்யும் போது கூட ரங்கநாயகிக்கு தெரிந்திருக்கவில்லை தான் ஏமாற்றப்பட்டது. ரங்கநாயகியின் பாலியல் அனுபவம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது.
        
ரங்கநாயகியை பலாத்காரம் செய்யும் அந்த ஆசாமி ஒரு தொழிலதிபர். இச்சம்பவத்துக்கு பிறகு ரங்கநாயகியை நிரந்தரமாக தன்னுடைய விருந்தினர் மாளிகையில் தங்க வைத்துக்கொள்ள விருப்படுகிறான் அவன். ரங்கநாயகியின் காதலன் ஒரு பெரிய தொகைக்காக அதை செய்துமுடிகிறான். நேரில் இதை கானும் ரங்கநாயகியோ மனமுடைந்து அழுகிறாள்.
        
அதைத் தொடர்ந்த இரண்டாவது வருடத்தில் ஃபாசில் எம்பவனை சந்திக்கிறாள் ரங்கநாயகி. அந்த தொழிலதிபரை கொலை செய்து, ஃபாசில் தான் அவளை மீட்டுகிறான்.
ஃபாசில் அவளை மண்டோதரியிடம் ஒப்படைக்கிறான். மண்டோதரியிடம் வந்த பிறகு ரங்கநாயகியின் வாழ்க்கையில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்கிறது.

விதவிதமான மணிதர்களை (ஆண்களை) சந்திக்கிறாள். ஒவ்வொரு ஆணும் படுக்கையில் வெவ்வேறு மாதிரியாக இருப்பது அவளுக்கு பிடிக்கிறது. ஒருவன் குடித்துவிட்டு உடலுறவு கொள்ள நினைக்கிறான். மற்றொருவன், உடலுறவு முடிந்தவுடனேயே குளிக்கச் சென்றுவிடுகிறான். ஒருவன் கரமைதுனம் செய்துவிட்டு படுக்க வருகிறான். மற்றொருவனோ ரங்கநாயகியவே கரமைதுனம் செய்ய சொல்லிப் பார்க்கிறான். படுக்கையை ஆக்ரோஷமாக பகிர்ந்துக் கொள்கிறாள் ரங்கநாயகி. ஒரு ராணியைப் போல வளம் வருகிறாள். அங்கே இருக்கும் பெண்களின் பெர்ஃபாமென்ஸை கவனித்து தன்னுடைய கஸ்டம்ர்களை கவனிக்கிறாள். மண்டோதரியிடம் அதிக சந்தேகங்களை கேட்கிறாள். அவளும் புகைத்துக் கொண்டே ரங்கநாயகிக்கு பதிலளிப்பாள். பெரும்பாலும், ஒரு பெண்ணின் பெர்ஃபாமென்ஸை வைத்து தான் பணம் அளவிடப்படுகிறது. ரங்கநாயகி டாப் மோஸ்ட் பெர்ஃபாமராக மாறிவந்தாலும் ராணியை கண்டு ரொம்பவும் வியந்துப் போகிறாள். ராணி தான் அங்கே டாப் மோஸ்ட் வாண்டட் பெர்ஃபார்மர். அவளுடைய பெர்ஃபாமென்ஸை பார்த்துவிட்டால் குறியே இல்லாதன் கூட பேனாவை எடுத்து குறியீடு எழுத ஆரம்பித்துவிடுவான். அங்கே வரும் ஆண்கள் பெரும்பாலும் ராணியின் ரசிகர்களாகவே இருந்தார்கள்.

ராணிக்கு இணையாக ரங்கநாயகியும் ரசிகர்களை குவித்துவருகிறாள். இருவருக்கும் கடும் போட்டி நிலவுகிறது.  

எது எப்படியாகினும் ராணிதான் சீனியர் ஸ்டார். அவளுக்கு இருக்கும் மாஸ் குறைவதாகவே இல்லை. வருபவர்களெல்லோரும் ராணியின் மீதே பணத்தை அள்ளி அள்ளி எறிந்தார்கள். முதன்முதலாக பாலியல் வாசனையோடு சேர்த்து பணத்தின் மீதான வாசனையும் ரங்கநாயகியை ஆட்க்கொள்கிறது.

அங்கே வருபவர்களில் அரசியல்வாதிகளுக்கு இணையாக பணம் சம்பாதிப்பவர்களாக இருந்தாலும், (உதாரணம்:- தொழிலதிபர்கள், ரவுடிகள், போலீஸ்காரர்கள்) அரசியலாளர்களின் கட்டட்ற சுதந்திரம் ரங்கநாயகியை மலைக்கச் செய்கிறது. ராணிக்கு ஒரு அரசியல்வாதி ரெகுலர் கஸ்டமர். அவர் பெயர் நீலகண்டன். அவர் இருக்கும்போது அழுக்குச் சட்டை ரவுடிகளோ காக்கி சட்டைகாரர்களோ ராணியிடம் நெருங்க மாட்டார்கள். ராணிக்கு அவர் புதிதாக வீடு கட்டுக் கொடுத்திருக்கிறார். அதுவும், ரெண்டு கோடி செலவில் அவள் விருப்பப்படி. அரசியலில் நீலகண்டன் எந்தமாதிரியான பதவியில் இருக்கிறார் என்பதெல்லாம் ரங்கநாயகிக்கு தெரியாது. அவர் வெள்ளை சட்டை அணிந்துக்கொண்டு கூலிங்க்ளாஸ் மாட்டிக்கொண்டு வருவதைப் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே இருப்பாள். ரங்கநாயகிக்கு எப்படியாவது நீலகண்டனை தன் வசப்படுத்த வேண்டுமென்று தோன்றுகிறது.

இப்படியாக சிலநாட்கள் கழிகிறது. ஒரு காரியத்தை செய்துமுடிக்க ஒருப் பெண்ணைப் பயன்படுத்த நினைக்கிறார் நீலகண்டன். ராணியை விட்டால் காரியம் சட்டென்று முடிந்துவிடும். ஆனால், அவளை பயன்படுத்த நீலகண்டனுக்கு மனம் ஒப்பவில்லை. அங்கே உள்ளவர்களில் யார் இதற்கு சரிவருவார்களென்று தேடுகிறார். அப்போது, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தான் அக்காரியத்தை முடித்துக் கொடுப்பதாக நீலகண்டனிடம் சொல்கிறாள் ரங்கநாயகி. (இங்கே இருந்து தான் கதை துவங்குகிறது.) 

Sana in Rajapattai
Notes : இது ராஜபாட்டை என்ற மொக்கையான படத்தில் வில்லியாக நம்பவைக்கப்பட்ட அல்லது வடிவமைக்கப்பட்ட   ”அக்கா” என்ற கேரக்டரை    மையமாக வைத்து எழுதப்பட்டது. இது முழுக் கதை அல்ல. ரங்கநாயகி என்ற அக்காவின் அறிமுகம் மட்டுமே. என்னவோ தெரில என்ன மாயமோ தெரில... எனக்கு இந்த மாதிரி தான் கதை எழுத தோனுது. இன்னும் அக்காவைப் பற்றி எழுதிவருகிறேன். தாங்க முடியாத ஏக்கமும் வறுமையும் மூர்க்கமும் கொண்ட ஒரு பெண். அவளே கதையின் வேறொரு தளத்தில் அதிகாரமும் சொகுசும் எகத்தாளமும் கொண்டவளாக வளம் வருகிறாள். இந்த இரு மாறுபட்ட நிலையின் இடையே ஊடாடிக் கிடக்கும் உணர்வுகளே திரைக்கதையாக மாற இருக்கிறது.

Additional Notes : ரொம்ப நாளாக இந்த கதையை யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் இதே தீவிரத்துக்கு பிரபல நடிகர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு இன்னோரு கதை என்னை ஆட்க்கொண்டுவிட்டது. இதை முடிக்காமல் வேறு கதைக்கு செல்ல முடியாத சூழல். ஆகையால், எழுதி இக்கதையை யாருக்காவது கொடுத்துவிடப் போகிறேன். இதற்கு க்ரெடிட் சீன் கூட யோசித்து வைத்துவிட்டேன்.


சனி, 6 ஜூலை, 2013

அலைந்து திரிபவன் : My Gift for Dayanidhi


Piano guys என்ற இந்த குழுவில் Jon Schmidt, Steven Nelson, Paul Anderson, Al van Der Beek, Tel Stewart என மொத்தம் ஐந்து பேர். இவர்களில் பால் ஆண்டர்ஸன் தான் பியானோ காய்ஸ் என்ற குழு உருவாக மூல காரணமாக இருந்தவர்.

Jos Schmidt      – pianist
Steven Nelson    – cellist
Paul Anderson    – General Manager
Al Van Der Beek – Studio Engineer and Co-writer
Tel Stewart      - videographer  

ஆரம்ப காலத்தில், Utah-வில் பியானோக்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றுக்கு தண்ணீர் சப்ளை செய்பவராக இருந்திருக்கிறார் ஆண்டர்ஸன். அடிப்படையில், அவருக்கு பியானோ பிஸ்னஸ் செய்யும் ஆர்வம் இருந்ததால், தண்ணீர் கொண்டு போகும் நேரத்தை தவிர அடிக்கடி அங்கு சென்று இருக்கும் பியானோக்களையெல்லாம் வாசித்து பார்ப்பாராம். அப்படி ஒருமுறை வாசித்துக் கொண்டிருக்கும் போது வாடிக்கையாளர்கள் வர, அவர்களிடம் பேசி ஒரு பியானோவை விற்று கொடுத்திருக்கிறார். இந்த விசியம் முதலாளியின் காதுக்கு போக, ஆன்டர்ஸனுக்கு அங்கு வேலை கிடைக்கிறது.

அவருக்கு பிடித்த தொழில் தான் என்றாலும் ஆர்வமே இல்லாமல், அந்த நிறுவனம் இருந்த அதே ஷாப்பிங் மாலில் வேலை செய்துவந்த இளம் பெண்களிடம் அரட்டை அடித்துக் கொண்டு பொழுதை கழிக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த நிறுவனத்தில் பியானோக்கள் விற்கும் பகுதி லாபம் இல்லாமல் நடந்துக் கொண்டிருப்பதை கவனிக்கும் போது தன் எதிர்காலத்தை பற்றிய சிந்தனை வருகிறது. அச்சமயம் இரண்டு வழிகள் தான் அவருக்கு தெரிகிறது. ஒன்று, வேறு ஒரு நல்ல வேலையை தேடிப் போக வேண்டும் அல்லது தன்னுடைய முழு கட்டுப்பாட்டுடன் இந்த தொழிலை செய்யவேண்டும். ஆண்டர்ஸன் இதை பற்றி நிறுவனத்தின் முதலாளிகளிடம் பேசுகிறார். அவருடைய யோசனை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

முதல் கட்ட வேலையாக நிறுவனத்தை விளம்பரப்படுத்த வேண்டிய நடவடிக்கையை எடுக்கிறார் ஆண்டர்ஸன். அதற்காக அவர் உருவாக்கிய குழு தான் தி பியானோ காய்ஸ். ஆரம்பத்தில் அவருடைய நண்பர்களை வைத்து தான் வீடியோ தொகுப்புகளை  தயாரிக்க துவங்கினார். ஆனால், அந்த முயற்சி தொல்வியடைகிறது. சில நாட்கள் எந்த வேலையிலும் ஈடுபடாமல், இதை பற்றி யோசித்துக் கொண்டு இடைபட்ட நேரத்தில் யூ ட்யூப், ஃபேஸ் புக் என இனையதளத்தில் மார்க்கெட்டிங் செய்வதை பற்றி தெரிந்து கொள்கிறார்.

இந்த சமயத்தில், Jon Schmidt, Sharp Nelson இருவரும் அதே ஊரில் சில கச்சேரிகள் மூலம் பிரபலமாகி வருகிறார்கள். இவர்கள் தான் இந்த குழுவுக்கு மையப்புள்ளியாக இருக்க சரியான ஆட்கள் என்று ஆன்டர்ஸன் நம்புகிறார். இருவரிடமும் குழுவில் இனைவதை பற்றி பேசுகிறார். ஏற்கனவே, அவர்கள் யூ ட்யூபில் கொஞ்சம் பணத்தை இழந்திருப்பதால், கூட்டனி வைப்பதில் ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள். அவர்களை தயார் படுத்தும் விதமாக தேவையானதையெல்லாம் செய்துகொடுத்து, அதற்காக அதிக நேரத்தை செலவிடுகிறார் ஆண்டர்ஸன்.

தாங்கள் இருந்த பொருளாதார நிலையை பற்றி பால் ஆண்டர்ஸன் இவ்வாறு குறிப்பிடுகிறார் : முதல் வீடியோவுக்கான காட்சியை படம்மெடுக்கும் போது, இது யாருடைய எதிர்பார்ப்பையும் குறைத்துக் காட்டுவதாக இருந்துவிட கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தோம். எங்களுடைய முழுநேரத்தை இதற்காக செலவிட்டால்தான் அப்படிபட்ட வீடியோக்களை உருவாக்கமுடியும் என்று தோன்றியது. இந்த நேரப் பிரச்சனையால் எங்களுக்கு பொருளாதார சிக்கல்கள் அதிகாக இருந்தது. மிக கடினமான சூழல் நிலவியது. ஒரு கட்டத்தில் குழுவை கலைத்துவிடலாம் என்று கூட நினைத்தோம். ஆனால் அதிர்ஷ்டவமாக அப்படி எதுவும் செய்துவிடாமல் இருந்த சிக்கல்களையெல்லாம் தாண்டி முதல் வீடியோவை சந்தோஷமாக செய்துமுடித்தோம். அதன் பிறகு, Sony, Yamaha நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துக் கொண்டதில் எங்களுடைய பொருளாதார சூழல் கொஞ்சம் மாறியது.

* * *  

”அப்படியே இனையத்தில் மேய்ந்துக் கொண்டிருந்த போது இதை கேட்டேன். இவர்களை பற்றி வாசகர் வட்ட நண்பர்கள் யாராவது எழுதுங்களேன்”. என்று பியானோ காய்ஸ் பற்றி சாரு ஒரு லிங்கை கொடுத்தார். அதை தொடர்ந்து இனையத்தில் நான் படித்ததை தான் இதுவரை படித்தீர்கள். இதே மாதிரி, சென்னையை சேர்ந்த மூன்று பள்ளி மாணவர்கள் இனைந்து அவர்களே ”சொந்தமாக” இசைத்து பாடிய துளி துளி என்ற பாடலின் லிங்கையும் கொடுத்திருந்தார்.

அந்த பாடலை கேட்ட போது எனக்கு அந்த மாணவர்களிடம் இதை சொல்ல தோன்றியது. ”தயவு செய்து டி.வி சேனல்கள் பக்கமோ.. சினிமா பக்கமோ சென்றுவிடாதீர்கள். குறிப்பாக, இந்த ”சூப்பர் சிங்கர்” கூட்டதுக்குள் சிக்கிக் கொள்ளவேண்டாம். ப்ளாட்ஃபார்ம் அமைத்து தருகிறோம்-வீடு கட்டி தருகிறோம் என உங்களுக்கு இருக்கும் தனிசிறப்பை சுரண்டி எடுத்து தடம் தெரியாமல் மறைத்துவிடுவார்கள். உங்களுடைய குழுவை மட்டும் வலுப்படுத்துங்கள். அடுத்த தலைமுறையில் உங்களை அடிச்சுக்க ஆளில்லை”.

சூப்பர் சிங்கர் - டாப் சிங்கர் இன்னும் பல சிங்கர்ஸ் போட்டிகளை டிவி சேனல்கள் போட்டி போட்டு நடத்திக் கொண்டிருக்கிறது. அதை பற்றி எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. ஒரு சேனல் வருடத்துக்கு நான்கு சூப்பர் சிங்கர்களை உருவாக்கிக் கொண்டு வருகிறது. ஒரு சேனலை பார்த்து மற்ற சேனல்களும் அதையே தான் செய்து வருகின்றது. இதுவரை உருவாகிய அந்த சூப்பர் சிங்கர்களெல்லாம் எங்கே போனார்கள். அதே சேனல்கள் எப்போதாவது அவர்களை கூட்டிவந்து பெருமை பீத்திக் கொள்ளும், சிங்கப்பூர்-மலேசியா என சுற்றுகிறார்... பாடுகிறார்.. என்று. அங்கே எல்லாம் சென்று பாடுவது ஒரு விஷயமே இல்லை. தமிழர்கள் அதிகமாக வாழும் தேசங்கள் அது. மேலை நாடுகளில் வாழ்ந்தாலும் அவர்கள் தமிழர்களாயிற்றே’ இளையராஜாவின் பாடலை பாடினாலே போதும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார்கள்.
எனக்கு இந்த சேனல்களை பற்றி கவலையில்லை. டிவி என்பது பொழுதுபோக்குவதற்கு மட்டும் தான் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். என்னுடைய கவலையெல்லாம் வயது வித்தியாசம் இல்லாமல் உருவாகிவந்த அந்த சிங்கர்களை பற்றித் தான். மேடைகளில் மீது சினிமா பாடல்களை பாடித்தான் பழக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரால் கூட இதுவரை ஒரு Solo Album கொடுக்கப்படவில்லை.  
    
 * * *
  
புத்தகங்களை எப்படி வாசிக்கிறேனோ அது போல தான் இசையையும் கேட்கிறேன். வாசகன் என்ற அடிப்படையில் இந்த ரசனையை தாண்டி அந்த இசை உருவாகும் சூழலையும் அதை உருவாக்குபவர்களின் வாழ்க்கையையும் படிக்கும் போது எனக்கு வாழ்க்கையில் ஒரு தர்ஸனம் கிடைக்கிறது.

இனி, நீங்கள் படிக்க போவது Nina Simone பற்றி :-
1950களிலும் 60களிலும் அட்லாண்டிக் சிட்டியின் மிக முக்கியமான ஜாஸ் இசைக்கலைஞராக இருந்தார் நினா சிமோன். Jon Divine – Mary Kate Waymon என்ற கறுப்பின தம்பதிகளின் மகளாக 1933-ம் வருடம் ஃபிப்ரவரி மாதம் 21-ம் தேதி North Carolina-விலுள்ள Tryon-ல் நினா பிறந்தார்.

நினாவின் அப்பா, African Methodist Episcopal Church-ல் மணியகாரராக இருந்தார். மேரியும் அதே தேவாலயத்தில் தான் துதிபாடுபவராக பணியாற்றிவந்தார். நினா சிமோனை பற்றி எழுதும் ஆசிரியர்கள், அவள் பிறக்கும் போது ஆப்பிரிக்க-அமேரிக்க ஆன்மீகமும் கர்த்தரின்போதனை பாடல்களும் அவளை சூழ்ந்திருந்தது என்றே குறிப்பிடுகிறார்கள். நினாவுக்கு இரண்டரை வயதான போது, அவள் ஞாபகத்தில் இருக்கும் இசையை அப்படியே காற்றிசை கருவியில் இசைத்துக் காட்டுவாளாம். அவளுக்கு இயற்கையாகவே இசையில் இருக்கும் ஞானம் எல்லோரையும் பிரமிக்க வைத்திருந்தாலும் அவளை பியானோ வகுப்பில் சேர்த்து படிக்கவைக்க அச்சமயத்தில் ஜான் டிவைனின் பொருளாதார சூழல் இடம் கொடுக்கவில்லை.

தேவாலயத்தில் வேலையை முடித்துக் கொண்டு அதே ஊரில் வசிக்கும் Miller என்ற வெள்ளையரின் வீட்டில் வேலைக்கு செல்வார் மேரி. நினாவும் அவரோடு சேர்ந்து அவ்வபோது அங்கே செல்வதுண்டு. ஒரு நாள் நினாவின் திறமையை மில்லரிடம் எடுத்துச் சொல்லி உதவி கேட்கிறார் மேரி. அவரும் நினாவை வாசித்து காட்ட சொல்ல, நினாவும் பியானோ இசைக்க, அடுத்த ஒரு வருத்துக்கு நினா படிக்க தேவையான கட்டணத்தை கட்டிவிட்டாராம் மில்லர். நினா கொண்டாடிய முதல் வெள்ளைக்காரர் மில்லர் தான் என்று கூறப்படுவது இதனால் தான்.
ட்ரையன் டௌன் ஹாலில் நினாவின் முதல் மேடை கச்சேரி நடக்க இருக்கிறது. அன்று, அவளுடைய பத்தாவது பிறந்தநாள். ஊரின் பெரிய மனிதர்கள் எல்லோரும் வந்திருக்கிறார்கள். அவள் வாசிக்க தயாராகிக் கொண்டிருக்கும் போது, பார்வையாளர்களிடம் ஏதோ சலசலப்பு கேட்டு என்னவென்று கவனிக்கிறாள். அவளுடைய பெற்றோரை “இது நாங்கள் அமரவேண்டிய இடம் நீங்கள் ஹாலின் கடைசியில் இருக்கும் இருக்கைக்கு செல்லுங்கள்” என ஒரு வெள்ளைக்கார தம்பதி விரட்டிக் கொண்டிருக்கிறார்கள். உடனே, பியானோவை விட்டு விலகிவந்த நினா ‘என் பெற்றோரை முதல் வரிசையில் அமரவைத்தால் தான் வாசிப்பேன்’ என்று திட்டவட்டமாக கூறிவிடுகிறாள். இப்படி அவமானப்படுத்தபட்ட பின்பு தான், ஜானுக்கும் மேரிக்கும் முன்வரிசையில் இடம் கொடுக்கப்பட்டு கச்சேரி நடந்தது.

நினாவின் குடும்பமும் அவளும் கறுப்பர்கள் என்பதால் பல இடங்களில் நிராகரிக்கப் பட்டுள்ளார்கள். நினாவின் வாழ்க்கையில் மீண்டும் அதே போல ஒரு சமபவம் நடந்தது. Philadelphia-வில் உள்ள Curtis Institute-ல் சேர்ந்து படித்து க்ளாசிக் பியானிஸ்டாவது தான் அளுடைய கனவாக இருந்திருக்கிறது. 1950-ம் வருடம் Juilliard-ல் படிப்பை முடித்துவிட்டு அதில் கிடைத்த ஸ்காலர்ஷிப்பை வைத்து Curtis-ல் நுழைவுத் தேர்வை எழுதுகிறாள். ஆனால், நினாவின் கனவு நிராகரிக்கப் படுகிறது. கூடிய சீக்கிரமே Curtisலிருந்து அதற்கான கடிதம் அவளுக்கு வந்துவிடுகிறது.
அதை பற்றி நினா சிமோனின் மூத்த சகோதரர் Carrol இவ்வாறு சொல்கிறார் : ”Curis Institute நினாவை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. அதற்கு நிறம் தான் காரணம். ஒரு வெள்ளை இனத்தை சேர்ந்த பெண்ணுக்கு பதிலாக கறுப்பினத்தை சேர்ந்த பெண்ணை அவர்கள் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. அவளுடைய கனவே ஒரு ப்ரஃபஸ்னல் க்ளாசிக் பியானிஸ்டாவது தான். அவர்கள் அனுப்பிய கடிதம் நினாவின் கனவை சிதைத்துவிட்டது.

நினா சிமோனின் உண்மையான பெயர் Eunice Kathleen Waymon. 1954-ம் வருடம் கோடை விடுமுறையில் போது அட்லாண்டிக் சிட்டியில் இருக்கும் Midtown Bar & Grill என்ற மதுபானக் கூடத்தில் பியானோ இசைக்க Euniceக்கு வாய்ப்பு கிடைக்கிறது. மேரிக்கு பாரில் வாசிப்பதெல்லாம் சுத்தமாக பிடிக்காது. அதனால், ஒரு மாற்று பெயரில் அந்த வேலையை செய்ய நினைத்தாள் நினா. அவளுடைய முன்னால் காதலனின் புனைப் பெயரான Ninaவையும் அவளை பெரிதும் கவர்ந்த ஃப்ரெஞ்சு நடிகை Simone Signoretலிருந்து Simone-யும் எடுத்து இனைத்துக் கொண்டு மதுபானக் கூடத்தில் வாசிக்க துவங்குகிறாள். (இந்திய மதுபானக் கூடங்களை நினைத்துப் பார்க்கிறேன். பாவம், நம்மவர்களுக்கு கிடைத்ததெல்லாம் வெறும் மூத்திரநாற்றமும் வாந்தி மயக்கமும் தான்.) இரவு ஒன்பது மணிக்கு துவங்கி அதிகாலை நான்கு மணிவரை வாசிக்கவேண்டும். ஒவ்வொரு மணிநேரத்துக்கும் பதினைந்து நிமிடம் இடைவேளையும் கூட உண்டு.

அன்று இரவு, எந்த முன் பயிற்சியும் இல்லாமல் பிரபலமான இசைத்துண்டுகளை வாசிக்கிறாள் நினா. அதுவும் ஒரே இசைத்துண்டை திரும்ப திரும்ப வாசிக்காமல் அலைகளை போல மாற்றிக் கொண்டே இருக்கிறாள். முதல் நாள் இரவு வாசித்து முடித்ததும் பாரின் முதலாளி இப்படி கேட்கிறார்.

ஏன்? நீ பாடவில்லை.

நான் பாடகியல்ல. இது நினா

அதற்கு; நாளை நீ பாடகியாக போகிறாய். அப்படி இல்லையெனில் இந்த வேலையை விட்டுவிட போகிறாய்’ என கூறிவிட்டார் பாரின் முதலாளி.

மறுநாளே நினா பாடத் துவங்குகிறாள். ‘கடினமாக இருக்கும் இரண்டு அடுக்குகளையும் தவிர்த்துவிட்டு மூன்றாவது அடுக்கில் தான் என் குரலை பயன்படுத்தினேன். அதனால், பாடுவது கட்டாயமாக்கப்பட்டாலும் அது எனக்கு சிரமத்தை கொடுக்கவில்லை’ என விளக்கம் தருகிறாள் நினா.

If I am singing a protest song, it is crucial that the audience feel the way I feel. They have to understand the injustice that I am trying to name, you see. If I am singing something intimate, I want utter silence and I want an audience that I
can see, so I know whom I’m singing to. I am very concerned with the perfection of my piano playing and articulating the song’s message, but I don’t worry about my voice. 
                                                      - Nina Simone
                                
பிரபலமான ஜாஸ் கலைஞர் என்ற புகழுக்கு அப்பால் கறுப்பின மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடியவர் என்ற நிலையையை தன் பாடல்களின் மூலம் அடைந்திருந்தாள் நினா. அவளுடைய பாடல்கள் வெளிவந்த காலத்தில் ஆயிரக்கணக்கான கறுப்பின மக்களின் இதய குரலாகவே ஒலித்திருக்கிறது. Goddamn Mississippi என்ற பாடல் அந்த வகையை சார்ந்தது தான். அந்த பாடலின் லிங்க்: http://www.youtube.com/watch?v=LJ25-U3jNWM
நான் டைலராக பணிபுரிந்துக் நிறுவனத்தில் எப்போதும் இளையராஜாவின் இசை தான் ஒலித்துக் கொண்டிருக்கும். குறிப்பாக, ஒரு பாடலை மட்டும் அடுத்தடுத்து பன்னிரண்டு முறை கேட்பேன். அப்போது அங்கே வேலை செய்தவர்கள் அத்தனை பேருக்கும் வேறு எங்கே இந்த பாடலை கேட்டால் என்னுடைய நினைவுதான் வரும். இப்படியிருந்த நான் தான் இப்போது அவருடைய பாடல்களை கேட்காமல் தவிர்த்து வருகிறேன். காரணம் ஒன்று மட்டும் தான். எழுனூறு கோடி மக்கள் வாழும் இந்த பூமியில் இன்னும் ஆயிரக்கனக்கான மொழிகளில் லட்சக்கனக்கான பாடல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இளையராஜாவையோ, மற்ற தமிழ் இசையமைப்பாளர்களையோ மட்டும் கேட்டுக் கொண்டு ஏன் காலத்தை ஓட்டவேண்டும்.

இந்த பக்கம் என்னை திருப்பிவிட்டது சாருவின் எழுத்து தான். அவருடைய புத்தகத்திலேயே மாஸ்டர் க்ளாஸ் புத்தகமாக கலகம்-காதல்-இசை என்று ஒரு புத்தகம் இருக்கிறது. அது எனக்கு இசையை பல்வேறு கோணங்களில் அறிமுகப்படுத்தி வைத்துள்ளது. அப்புத்தகத்தில் இருக்கும் இசைக்கலைஞர்களை பற்றி இன்னும் நான் பேச துவங்கவில்லை. இசையோடும் சமூகத்தோடும் அவர்களுக்கு இருந்த Passion நம்மவர்களில் ஒருவருக்கும் இல்லையென்றே குற்றம் சாட்டத் தோன்றுகிறது. அவர்களை பற்றி தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளில் பேசலாம்.
        * * *                                              
வானொலியிலோ, திரைப்படங்களிலோ எந்த இசையை கேட்டாலும் அதை அப்படியே வாசித்துக் காட்டுவாராம் யானி. அப்போது அவருக்கு ஆறுவயது இருக்கும். யானிக்கு Passion இசை மீது மட்டும் தான் என்று குறிப்பிட்டு இல்லை. அவருக்கு 14வது வயது இருக்கும்போது தேசிய அளவில் ஆடவர்களுக்கான ஐம்பது மீட்டர் நீச்சல் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார்.

யானியின் பேஷன் ஒற்றைச் சிந்தனையோடு புதிய இசையை கண்டறிவதிலேயே இருக்கிறது. புதிய புதிய கருவிகளை கொண்டு அவர் கொடுக்கும் இசை இதுவரை யாரும் கேட்டிராத ஒன்று. 2003-ல் வெளிவந்த ‘Ethnicity’ என்ற ஆல்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள சிம்பொனி இசையை உதாரணமாக வைத்துக் கொள்ளலாம். அந்த ஆல்பத்தில் ஆஸ்திரேலியாவின் Didgeridoo, Celtic violin, இந்தியாவின் Armeninan duduk, Tabla என வித்தியாசமான இசைக்கருவிகளை பயன்படுத்தி இருக்கிறார் யானி.

இதோ லிங்க்களில் இருக்கும் பாடல்களை கேளுங்கள் :
  1.    http://www.youtube.com/watch?v=xtODAJbakTc
  2.   http://www.youtube.com/watch?v=cLTAQ4nc05I
முதல் லிங்கில் இருக்கும் பாடலில், நடு மேடையில் ஒரு காற்றிசைக் கருவி வாசிக்கப்படுகிறது பாருங்கள். அந்த பாடலின் குதூகலத்தை அந்த கருவியே தீர்மானிக்கிறது.

யானி தன் பாடல்களின் மூலம் கொண்டாட்டத்தையே முன் வைக்கிறார். அவர் கையாளும் ஒவ்வொரு இசைக்கருவியும் அதையே தான் செய்கின்றன. அது, மனதுக்குள் சுருண்டுகிடக்கும் சந்தோசக் கூறுகளை சீண்டிப் பார்க்கிறது. ’வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் சந்தோசம் மறைந்துக் கிடக்கிறது. இதைக் கேட்டாவது அந்த சந்தோசங்களை வெளியே கொண்டு வா’.. என சொல்வதை போலவே இருக்கிறது.

Piano Guys-Yanni-Nina simone இந்த மூவரில், Yanni in words என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார் யானி. நினாவும் தன் வாழ்க்கையை பற்றி I put a spell on you என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறாள். அதையெல்லாம் படிக்கும் போது இசையை பற்றியும் அவர்களை பற்றியும் கொஞ்சம் அனுபவங்கள் கிடைக்கும்.

 


மேலும், இந்த கட்டுரை தயாநிதியின் திருமணத்துக்கு நான் கொடுக்கும் பரிசு என்பதால், இதை படிப்பவர்கள் எனக்கு ஸ்பெஷலாக எதுவும் செய்யவேண்டாம்.   
    

சனி, 1 ஜூன், 2013

அலைந்து திரிபவன் : Celebration & Poverty

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று உங்களுக்கு Passion இருந்தால் இந்த பதிவை தொடர வேண்டாம்.

ஒரு படம் எடுக்கப்பட்டு  அதை மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்க முடியாது. அதற்காக, ஒரு செயல்முறை இருக்கிறது. இரண்டு அமைப்புகளின் தலையீட்டை சகித்துக் கொண்டே தீர வேண்டும். ஒன்று, தணிக்கைத் துறை. இந்தியாவில் தணிக்கைத்துறையின் தேவை எந்தளவுக்கு முக்கியமானதாக   இருப்பதை போல கலைஞர்களுக்கான படைப்பு சுதந்திரமும் முக்கியமானது. சரி, நாம் ஒரு படம் எடுத்து பிறகு தணிக்கையை பற்றி விரிவாக பேசலாம். இரண்டாவது, Distributors எனப்படுகிற கமிஷன் வியாபாரிகள். இவர்கள் பல சமயங்களில் படத்தின் போக்கையே மற்றக் கூடிய வலிமை படைத்தவர்களாக இருப்பது கலையின் சாபம். காமெடி பண்ண சந்தானம் இருந்தால் போதும் எந்த கோமாளி ஹீரோவாக நடித்தாலும் சரி... யாருடைய படத்தை நகல் எடுத்தாலும் சரி... சந்தை படுத்த நாங்கள் தயார் என்று நிற்கிறார்கள். சரி, இவர்களை பற்றியும் ஒரு படம் எடுத்துவிட்டு பேசிக்கொள்ளலாம். அப்படி என்ன மாதிரியான படத்தை தான் எடுக்க நினைக்கிறாய் என கேட்கிறீர்களா? என்னிடம் ஒரு ப்ளான் இருக்கு. அதற்கு முன், ஒரு சம்பவம்.

சமீபத்தில், ஃபேஸ்புக் மூலம் அழகர் என்பவர் தொடர்புகொண்டு 'என்னுடைய நண்பர் ஒருவர் ஒரு திரைப்படம் தயாரிக்க இருகிறார். பட்ஜெட் பற்றி கவலையில்லை. அஜித் அல்லது சூர்யாவுக்கு தகுந்த கதையாக இருந்தால் சொல்லுங்கள் என்றார். நான் கொஞ்சம் உற்சாகமானேன். அஜித்தை மையமாக வைத்து ஒரு அட்டகாசமான கதை இருக்கிறது அது கண்டிப்பாக Anurag Kashyap-ன் படங்களை துவம்சம் செய்துவிடும் என்றேன். அப்படியா..... என லேசாக இழுத்தார். ஐந்து நிமிடங்கள் போனிலேயே கதையை சொல்லிவிட்டு திரைக்கதையை பற்றி நேரில் விரிவாக பேசலாமென கூறினேன். தன் நண்பரிடம் பேசிவிட்டு இரண்டு நாள் கழித்து அழைக்கிறேன் இருவரும் கோயம்புத்தூரில் சந்திக்கலாம் என்றார் அழகர். சரியென, கொஞ்சம் முன் எச்சரிக்கையோடு அந்த இரண்டு நாளில் டம்மியாக ஒரு திரைக்கதையை எழுதி வைத்திருந்தேன். அவர் அழைப்பார் என எதிர் பார்த்திருந்தேன். அழைக்கவில்லை. நானே அழைத்தேன். ஸ்விட்ச் ஆஃப் என்றது பெண்குரல். இப்படித்தான் நடக்கும் என ஏற்கனவே யூகித்து வைத்திருந்ததால் அதை பற்றி கவலையில்லாமல் வழக்கம் போல் என் வேலையை பார்க்க துவங்கிவிட்டேன். ஒரு மாதம் சென்றிருக்கும் மீண்டும் அழகர் ஃபோனில் அழைத்தார். எடுத்து பேசினேன். அவருடைய தயாரிப்பாளர் நண்பருக்கு இந்த கதையில் ஈடுபாடு இல்லையாம். வேறு ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் என்றார். மேலும், அஜித் இந்த கதாப்பாத்திரத்தை எற்றுக் கொள்வாரா என்பதும் சந்தேகமாக உள்ளது என்றார். அஜித்திடம் கதையை சொன்னீர்களா? என்றேன்.  இல்லையென்றார் அழகர். என்னிடமும் வேறு கதை இல்லையே; புதிதாக ஏதாவது கதை தோன்றினால் சொல்வதாக சொல்லி இணைப்பை துண்டித்துவிட்டேன். இப்படித்தான் இருக்கிறது என்னை போன்ற கதை சொல்லிகளின் நிலை. அஜித்துக்கு ஒரு கதையை சொன்னால் அதை அவரிடம் சொல்லிவிட்டு தானே மற்ற சமாச்சாரங்களை பேசவேண்டும். இதற்கிடையில், கதை கேட்க வருபவர்கள் ஓசியிலேயே --------விட்டு போக நினைக்கிறார்கள். அதனால், முதலில் கூலியை பேசிவிட்டு தான் மற்றவையை எல்லாம் பேச போகிறேன். இந்தியாவில் கம்யூனிச சித்தாந்தம் தோற்று போன ஒன்றாக இருந்தாலும் அதை பற்றிய சிந்தை ஒவ்வொருவருக்கும் இருக்கத் தானே வேண்டியிருக்கிறது.

நான் என்ற முறையில் ஒரு படம் எடுக்கவேண்டும் என்று எந்தளவுக்கு Passion ஆக இருக்கிறேனோ... அதே அளவு Passion அசோகமித்திரன், சாருவின் கதைகளையும் படமாக்க வேண்டுமென்பதிலும் இருக்கிறது. ஒரு எழுத்தாளரின் கதையை படமாக்க வேண்டுமானால் அவரிடம் முதலில் அனுமதி வாங்க வேண்டும். இந்த சட்டரீதியான பிரச்சனைகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில், அப்படி அவர்களுடைய கதைகளை படமாக்குவதில் இருக்கும் பிரச்சனைகளை பற்றி நிறைய பேசவேண்டியுள்ளது. அசோகமித்திரனின் பயணம் சிருகதையை எந்த தயாரிப்பாளராவது இயக்குனராவது படித்திருக்கிறீர்களா? அப்படி படித்திருந்தால் இந்த முகவரிக்கு அணுகவும் nithyapriya.writer@gmail.com. இக்கதைக்கு அற்புமாக திரைக்கதை எழுதி வருகிறேன் பெரிய அளவில் பட்ஜெட் தேவைப்படாது. சாருவின் "உன்னத சங்கீதம்" படமாக எடுக்கப்பட்டு  மக்களிடம் கொண்டு சென்றால் கண்டிப்பாக நல்ல வரவேற்பு இருக்கும். ஆனால், இந்த சிறுகதைக்கு இரண்டு-மூன்று முறை திரைக்கதை எழுத முயன்று தோற்றுவிட்டேன். நீண்ட வாசிப்புக்கு பிறகு, தற்போது "காற்றில் கலந்த வார்த்தைகள்" கதையை திட்டமிட்டுள்ளேன். (ரெண்டாம் ஆட்டம்... அது தனிக்கதை.) சாருவை கூட இதில் நடிக்க வைக்கலாம். சாருவின் இந்த இரண்டு கதைகளும் செக்ஸின் இரண்டு வேவ்வேறு உருவங்களை கொண்டது. உன்னத சங்கீதம் பாலியல் செழுமையை பற்றியும் காற்றில் கலந்த வார்த்தைகள் பாலியல் வறுமையை பற்றியும் பேசுகின்றன.

இப்போது உங்களுக்கு புரிந்திருக்க வேண்டுமே நான் எந்த மாதிரியான படம் எடுக்க நினைக்கிறேன் அழகர் ஏன் ஃபோனை எடுத்திருக்க மாட்டார் என்று. நான் சொல்ல நினைக்கும் கதை கொண்டாட்டமாக இருந்தாலும் சோகமானதாக இருந்தாலும் அது செக்ஸை பற்றியதாக தான் இருக்கும். தமிழகத்தில் Sexual politics பற்றி எதையும் பேச முடியாது. அப்படி மீறி பேசினால் அடி,உதை தான் கிடைக்கும் ரெண்டாம் ஆட்டம் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.  வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று உங்களுக்கு Passion இருந்தால் இந்த பதிவை தொடர வேண்டாம் என்று இதனால் தான் சொன்னேன். மேலும், தயாரிப்பாளர்களை தேடி இப்பொதும் அலைந்து  திரிந்து கொண்டு தான் இருக்கிறேன். Abdellatif Kechiche- ஐ நினைத்தால் எனக்கு மேலும்-மேலும் Passion அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

மேலே, சொன்ன அசோகமித்திரன்-சாருவின் கதைகளெல்லாம் Future Plan தான். தற்போது ஒரு குறும்படம் எடுக்க திட்டமிட்டுள்ளேன். கதைக்கு தலைப்பு - பாலியல் வறுமை. நான் பைத்தியக்காரனாக திரிந்து கொண்டிருந்த காலத்தை மையப்படுத்தி களம் அமைந்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் என் ஈ-மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளவும்.

(தொடரும்) 

செவ்வாய், 28 மே, 2013

அலைந்து திரிபவன்

ரெண்டாம் ஆட்டத்துக்கு பிறகு சினிமா:அலைந்து திரிபவனின் அழகியலில் வரும் கட்டுரைகள் கலைகள் பற்றி எனக்கு இருக்கும் புரிதலை வேறு தளத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டது. இதில் வரும் கட்டுரைகள் கலைகள் மீது இருக்க வேண்டிய நியாயமான Passion -ஐ எடுத்து காட்டுகிறது. (இன்னும், "லத்தின் அமெரிக்க சினிமா" புத்தகத்தை படிக்கவில்லை. அதை படித்த பிறகு இதே போன்ற இன்னொரு கட்டுரை எழுதவேன்.) இப்புத்தகத்தில் Werner Herzag பற்றி வரும் கட்டுரையை படித்தால் உங்களுக்கே அது புரிந்துவிடும். சாரு சுட்டிக்காட்டியுள்ள இயக்குனர்கள் வெறும் பணத்துக்காகவும் புகழுக்காகவும் அல்லது மக்களுக்கு Entertainment கொடுக்கிறோம் என படம் எடுத்தவர்கள் இல்லை. சரி, அப்படி அவர்கள் எந்த மாதிரியான படங்களை எடுப்பவர்கள்" என கேட்டு விடாதீர்கள். நீங்களே, கட்டுரைகளில் அதை படித்து தெரிந்துக் கொள்ளலாம்  அல்லது நான் படம் எடுக்கும் வரை காத்திருங்கள்.

விஸ்வரூபம் படத்தை பார்க்கும் போதே தெரிந்துவிட்டது. அந்த படம் எங்கே தோல்வி அடைந்தது என்று. அதில், நயமாக(Nuance) சில காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒரு இடத்தில் தாக்குதல் நடந்துவிட்டதை அறிந்து ஓமர் தன்னோடு காஷ்மீரியையும்(கமல்) அழைத்துச் செல்வான். தாக்குதல் நடந்து சில நிமிடங்களே ஆகியிருக்கும். ஒரே பிணக்குவியலாக இருக்கும் எல்லோரும் அதைத் தாண்டி சென்று கொண்டு இருப்பார்கள். அப்போது, தாக்குதலில் தப்பியிருக்கும் ஒரு மூதாட்டி ஆப்கானிஸ்தானை ஆண்டவர்களின் பெயர்களையெல்லாம் சொல்லி திட்டுவார். அந்த மூதாட்டியின் உருவத்தில் கமல் தான் எனக்கு தெரிந்தார். மற்றொரு காட்சியில், அமெரிக்கர்கள் தாக்குதகள் நடத்தி முடித்திருப்பார்கள். ஒமருக்கு காலில் அடிப்பட்டு விடும். "இதெல்லாம் ஏன்? எதற்காக இந்த சண்டை என்று புலம்புகிறான் ஓமர்". அப்போது கமல் (காஷ்மீரி) கூறுவார் "பாய், நம்மை போன்ற ஜிகாதிகள் எல்லாம் ரத்தம் சிந்தலாமே தவிர கண்ணீர் சிந்த கூடாது". இதிலிருந்தே நாம் தெரிந்துக்கொள்ள வேண்டாமா.. விஸ்வரூபம் ஆப்கன் மக்களின் வாழ்க்கை சூழலை பற்றிய படமல்ல. குறைந்த பட்சம் அதையாவது செய்திருந்தால் நிம்மதியாக இருந்திருக்கும். இந்தியன் என்ற முறையில் படம் நெடுக்கிலும் ஆப்கன் ஜிகாதிகளுக்கு, அமெரிக்க ராணுவத்துக்கு எதோ அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறார். தொடர்ந்து இப்படத்தை பற்றி யோசித்தால் மன உளைச்சலே ஏற்படுகிறது. 

பருத்திவீரன், சுப்ரமணியபுரம் போன்ற க்ளாசிக்குகளை கொடுத்த இரண்டு இயக்குனர்களும் அந்த ஒரு படத்தோடு தடம் மாறி போய்விட்டார்களே அதற்கு என்ன காரணம். மிஷ்கினின் நந்தலாலா தமிழ் சீரியஸ் சினிமாக்களில் மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. பாவம், தற்போது அவரையும் காணவில்லையே. இது போன்ற சமாச்சாரங்களை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால், Entertainment எனக்கும் கண்டிப்பாக தேவைப்படுகிறது. துரதிஷ்டவசமாக தமிழில் எண்டர்டெய்ன்மெண்ட் கூட நம் உணர்ச்சியை(Sensibility) கேலி செய்வது போல் அமைந்து விட்டது. ஏதாவது எடாகூடமாக பேசிவிட்டு கவுண்டமணியிடம் செந்தில் அடிவாங்கும் போதும் சிரிச்சோம். வடிவேலுவை நாய் துரத்தும் போது கூட சிரிச்சோம். ஐயா... விவேக் A ஜோக் தான் சொல்லுவார் அப்போது கூட சிரிக்கத்தான் செஞ்சோம். இப்போ சந்தானம் வெலிக்கி போனா, குசு விட்டா கூடவா சிரிக்கணும்.

OK, Fine. சாருவின் விமர்சனங்களை எல்லாம் படித்துவிட்டு, அவரை போலவே எழுதுவதால் என்ன பயன். இன்றைய சூழலில் விமர்சனம் என்பது செலவில்லாத விளம்பரமாகவே மதிக்கபடுகிறது. இது ஒரு மிகப்பெரிய சீரழிவுனிலை. சாரு இத்தனை வருடமாக இவ்வளவு நுணுக்கமாக விமர்ச்சனம் செய்துவந்ததற்கு "நடுவுல கொஞ்ச பக்கத்தை காணோம், சூது கவ்வும்" போன்ற திரைப்படங்கள் நல்ல பொழுதுபோக்கு படங்கள் என்ற அளவில் ஆறுதலை தருகிறது. சாருவை போல முழு வாழ்க்கையையும் இலக்கியத்தில் கழிக்க எனக்கு மனமில்லை. எனக்கு இலக்கியம் போல சினிமாவும் ஒரு கனவு. இசை, ஓவியம், இலக்கியம், நடனம் இதுபோல இன்னும் இருக்கும் கலைகள் அனைத்தையும் சினிமாவுல் அடக்கிவிடலாம். அது ஒரு பிரம்மாண்டமான களம். அதை தேர்ந்தெடுத்தது கொஞ்சம் மகிழ்ச்சியான ஒன்றாக இருந்தாலும், அந்த சினிமா ஒரு அட்டகாசமான பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் மதிக்கப்படுவதால் வருத்தமே மிஞ்சுகிறது.  நாள்பட நாள்பட வாசிப்பு என்பது அதல பாதாளத்துக்கு சென்றுவிட்ட கூடிய 'சாம்ஊகமாக' இருக்கிறது நம் சமூகம். அதனால் தான் எழுத ஆரம்பித்து இன்று வரை பல விசியங்களை வெளியிடாமலே வைத்திருக்கிறேன். அதையெல்லாம் கூடியவிரைவில் நாவலாக மாற்ற வேண்டும் அல்லது படமாக்க வேண்டும்.

தொடரும்....

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

சொதப்பல்கள் 4 in 1

Surf's up

கதாநாயகன் Cody. அவன் அலைசறுக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவனாக இருக்கிறான். அவனுடைய மானசீக குரு BIG Z. Cody-ன் குழந்தை பருவத்தில் Z அவனுக்கு ஒரு டாலரை பரிசாக தருகிறார்.
Cody அலைசறுக்கு போட்டியில் கலந்துக் கொள்ள தன் நண்பர்களோடு செல்கிறான். சில வருடங்களுக்கு முன்பு, Z போட்டியில் தோற்று இறந்துவிட்டதை தெரிந்து கவலைப்படுகிறான். அச்சமயத்தில் Tank Evans(The Shredder) என்பவனோடு போட்டி போட வேண்டிய சூழல் ஏற்ப்படுகிறது. (Tank தான் Z-ஐ போட்டியில் தோற்க்கடித்தவன்) டேங்குடன் போட்டியிட்டு கோடி தோல்வியடைகிறான். மூச்சுப்பேச்சு இல்லாமல் கிடக்கும் கோடியை காப்பாற்றி கீக்கிடம்(Geek) அழைத்து செல்கிறாள் Lani. பின், கீக்கும் கோடியும் நண்பர்களாகிவிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் கீக்தான் BIG Z என்பதை கண்டு கொள்கிறான் கோடி. பிறகு, கோடி Z-யிடம் பயிற்சி பெறுகிறான். இந்த முறை போட்டியின் முடிவில் BIG Z தலைமறைவு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.
இறுதியில், டேங்க் எவன்ஸை தோல்வியடைய செய்தாலும் போட்டியில் தோல்வியே அடைகிறான் கோடி. அது எப்படி என்பதை படத்தில் பாருங்கள். இந்த படத்தின் கதை அழுப்புத்தட்டாமல் எடுத்து செல்வது கதை சொல்லும் முறை தான்.

Surf’s up படத்தில் Glen(cody,s Brother), Reggie Belafonte(Surf Promoter), Mika Abromowitz(Talent scout), Chiken Job, என அத்தனை கதாபாத்திரங்களும் வெகு சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. குழந்தைகளுக்கான இக்கதை ஹாலிவுட்டில் பார்த்து பார்த்து சலித்துவிட்டது தான். இருந்தாலும் இதன் கதை சொல்லி சலுப்புதட்டாமல் கதையை எடுத்து சொல்கிறான்.
கதை சொல்லும் முறையில் இது மேஜிக்காகவே செயல்படுகிறது. நம்மவர்களில் மிஷ்கினை தவிர வேறு யாரிடமும் அது இருக்கிறதா என்பதே சந்தேகம். நந்தலாலா படத்தின் முதல் காட்சியை உதாரணமாக வைத்துக் கொள்ளலாம். (ரொம்ப புத்திசாலித்தனமாக நந்தலாலாவை மட்டும் உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டேன்.)
இப்படி அற்புதமான கதைகள் கிடைத்தும் நிறைய சுதப்பி மண்னை கவ்விய படங்கள் தமிழில் அதிகம் உண்டு. உதாரணம் : விஸ்வரூபம்-பொம்மலாட்டம்.
விஸ்வரூபம்
மத அரசியலை கமர்ஷியலாக பேசியதும் நம்மை போன்ற ஜிகாதிகள் ரத்தம் சிந்தலாமே தவிர கண்ணீர் சிந்த கூடாது என சில-பல தத்துவங்களை சீரியசாக உதிர்த்துக் கொண்டே போனதும் தான் விஸ்வரூபம் மகா மோசமான படமாக மாறிவிட்டற்கான காரணம்.
பொம்மலாட்டம்
ஒரே வரியில் சொல்லனும்னா... முதல்மரியாதை போல க்ளாசிக்காக வரவேண்டிய படம். காமெடிமசாலா கலந்து குப்பையாகிவிட்டது.